பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். பின்னர் தொழிலாளியின் உடலை, அவரது குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்து தகனம் செய்ய முடிவு செய்தார்கள். இதையடுத்து, ஆஸ்பத்திரியில் இருந்து ஹெப்பால் மின்மயானத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தொழிலாளியின் உடலை, அவரது மனைவி கொண்டு சென்றார். மின்மயானம் அருகே வைத்து ரூ.10 ஆயிரம் வாடகை கொடுக்க வேண்டும் என்று டிரைவர் கேட்டுள்ளார்.
ஆனால் தன்னிடம். ரூ.3 ஆயிரம் இருப்பதாகவும், மீதி பணத்தை யாரிடமாவது வாங்கி கொடுப்பதாகவும் தொழிலாளியின் மனைவி கூறியுள்ளார். இதனை ஏற்க ஆம்புலன்ஸ் டிரைவர் மறுத்ததுடன், தனக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தொழிலாளியின் உடலை மயானம் அருகே உள்ள நடைபாதையில் வைத்துவிட்டு டிரைவர் சென்றுவிட்டார். இதுபற்றி மயானம் அருகே இருந்தவர்களிடம் அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக யாரும் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என்று அம்ருததஹள்ளி போலீசார் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம்
நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று
சசிகலா த தமிழக பா.ஜ.க. தலைவர்
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப் உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங் இரண்டு வருட நீண்ட இடைவெளிக்கு இந்திய பிரதமர் நரேந்த ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாங்கம் பகுதி பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இட பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோ தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில்
சென்னையில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறா இந்தியாவில் நடந்து வரும் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன
