கொரோனா 2-வது அலையில் நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பலர் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில், ஜி.வி.பிரகாசுடன் வாட்ச்மேன், ஜெயம் ரவியின் கோமாளி, வருணுடன் பப்பி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் சம்யுக்தா ஹெக்டேவின் பெற்றோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
சம்யுக்தா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு இப்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஆனாலும் சுவை, வாசனை உணர்வை இழந்துள்ளேன். சோர்வாக இருக்கிறது. என்னை உதவி அற்றவளாக உணர்கிறேன். நான் அதிகமாக நேசிப்பவர்களை இழந்து விடுவேனோ என்ற பயம் வந்தது. மரண பயம் கொடுமையானது.
அம்மா, அப்பாவும் கொரோனா பாதிப்பில் இருந்தனர். எங்களுக்கு அந்தஸ்தும் ரசிகர்களும் இருந்தாலும் நோய் விஷயத்தில் உதவியற்றவர்களாகவே உணர்கிறோம். எனது அறையில் அடைபட்டு அழுதேன். என் அம்மாவை கட்டிப்பிடிக்க முடியவில்லை. நம்மில் பலர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது இல்லை. உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவு பழக்கம் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்’’ என்று கூறியுள்ளார்.
தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராம
தமிழில் கார்த்தியுடன் காற்று வெளியிடை படத்தில் நடித்
பாக்கியலட்சுமி சீரியல் விஜய்யில் ஹிட் லிஸ்டில் இருக்
கடந்த பிப்ரவரி 4ம் தேதி மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்ப
தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிப் பெற்ற படங்களில் மக்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பராகி வந்த 7C சீரியல் மூலம
தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர்
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரிய
நடிகர் கமல்ஹாசன் தான் கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் ஷோ
பிக் பாஸ் அபியுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே
கேரள பாப் பாடகர் வேடன் மீது சில பெண்கள் பாலியல் புகார்
அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்
குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆர்.சுர
விஜய் தொலைக்காட்சியின் மாபெரும்
