More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • லட்சத்தீவு மக்கள் கொந்தளிப்பு : இந்திய தேசிய லீக் கடும் கண்டனம்!
லட்சத்தீவு மக்கள் கொந்தளிப்பு : இந்திய தேசிய லீக் கடும் கண்டனம்!
May 29
லட்சத்தீவு மக்கள் கொந்தளிப்பு : இந்திய தேசிய லீக் கடும் கண்டனம்!

லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் கலாசாரம் மீது சுமத்தப்பட்ட சவால்களை ஏற்க முடியாது என்று இந்திய தேசிய லீக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



லட்சத்தீவில் நடைபெற்று வரும் அநீதிகளுக்கு எதிராக மத்திய மோடி அரசை கண்டித்தும், லட்சத்தீவை காக்கும் பொருட்டும், இந்திய தேசிய லீக் சார்பில் இணைய வழி போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு இந்திய தேசிய லீக் இளைஞரணி தேசிய பொது செயலாளர் சையத் சாதான் அஹமது தலைமை தாங்கினார்.



அப்போது சையத் சாதான் அஹமது பேசியதாவது, ” 97 சதவீதம் இஸ்லாமிய மக்கள் வசிக்கக்கூடிய லட்சத்தீவில் பொறுப்பு நிர்வாகியாக உள்ள பிரஃபுல் படேல் மதரீதியில் பழி வாங்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மாட்டிறைச்சி தடை போட்டுள்ளதோடு, மதுபான பார்களை லட்சத்தீவில் நடத்த பிரஃபுல் படேல் அனுமதி அளித்து, லட்சத்தீவின் பாரம்பரிய கலச்சாரத்தை குழி தோண்டி புதைத்துள்ளார்.



2 குழந்தைகள் மேல் பெற்று கொண்டவர்கள் தேர்தல் போட்டியிட தடை என்றும், பூர்வாங்க குடிகள் அமைத்துள்ள குடில்களை அகற்றி காலம் காலமாக வாழ்ந்து வந்த மக்களின் வாழ்வதாரத்தை பறிக்கும் செயலையும் பிரஃபுல் படேல் அரங்கேற்றியுள்ளார்.



யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் பாரம்பரிய கலச்சாரம் காக்கப்பட வேண்டுமெனும் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் பல முறை பல தரப்பினரும் வலியுறுத்தி வந்த போதிலும், அதை பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது, லட்சத்தீவில் நடைபெறும் ஜனநாயக படுகொலைக்கு துணை போவது போல உள்ளது.



பிரஃபுல் படேல் பிறப்பித்து வரும் உத்தரவுகளால், லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் கலாசாரம் மீது சுமத்தப்பட்ட சவால்களை இனியும் ஏற்க முடியாது. ஆகவே பிரஃபுல் படேல் உடனடியாக லட்சத்தீவு பொறுப்பு நிர்வாகத்தில் இருந்து திரும்ப பெறுவதோடு, பிரஃபுல் படேல் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை திரும்ப பெறும் வரை, இந்திய தேசிய லீக் போராட்டம் ஒயாது ” என்று கூறியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul24

பளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீ

Mar10

யேமனில் கேரளாவைச் சேர்ந்த தாதிக்கு மரண தண்டனை கொடுக்க

Sep10

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் டாக்டர் இந்திரா (வயது 60). இவர

Sep08

டிஜிபி மற்றும் எஸ்பி மீதான பாலியல் புகார் வழக்கை, விழு

Oct25

உத்தர பிரதேசத்தில் இன்று 9 மருத்துவ கல்லூரிகளை பிரதமர

Sep13

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக

Jan23

தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெ

Apr25

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்வ

Oct14

மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் ப

May26

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்த

Sep24

நாடாளுமன்ற மேலவை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் செல

Sep16
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (07:10 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (07:10 am )
Testing centres