உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு தினந்தோறும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள ஆஸ்பத்திரிகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
இந்தநிலையில் அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜெர்ஜிபே மாகாணத்தின் அரகாஜு நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை இந்த ஆஸ்பத்திரியில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் ஆஸ்பத்திரி முழுவதும் பரவியது.இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது.
ஆஸ்பத்திரி ஊழியர்கள் அனைவரும் நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேறினர்.இதனிடையே இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி கொரோனா நோயாளிகள் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான
இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை
கொரோனா தொற்று பாதிப்பு குறித்த உண்மையான தரவுகளை தவறாம
மராட்டிய மாநிலம் நாக்பூர் மற்றும் மாநிலத்தின் சில இடங
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயா ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் பேசிய உக்ரைன் ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தில், ரஸ்யா நிர்வ அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய ப உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ள உக்ரைனுடனான பேச்சுவார்த்தை சாதகமான பலனைத் தரும் என நம
