சீனாவில் அண்மை காலமாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக் கூடங்களில் அடிக்கடி கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தின் மீது வெறுப்பு கொண்ட நபர்கள் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக சீன போலீசார் கூறுகின்றனர்.
இந்தநிலையில் சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியோனிங் மாகாணம் டேலியன் நகரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர்களை மர்ம நபர் ஒருவர் திடீரெனெ கத்தியால் குத்தினார். இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். எனினும் அந்த மர்ம நபர் சற்றும் ஈவு இரக்கமில்லாமல் கண்ணில் பட்டவர்களையொல்லாம் கத்தியால் குத்தினார். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனிடையே இந்த கத்திக்குத்து தாக்குதல் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்திய நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். தாக்குதலுக்கான பின்னணி குறித்து போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவை சேர்ந்த தீபன்ஷூகெர் என்பவர் அமெரிக்காவில்
பொலிஸ் காவலில் இருந்தபோது பெண் ஒருவர் உயிரிழந்ததைத் த
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி இருந்த வேலையில், சீனாவி
அபுதாபி தடுப்பூசி மையத்தின் இயக்குனர் டாக்டர் கோசி ஜா
ரஷ்ய நகரமான கசானில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பா
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் ச
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ஈராக்கில், மூக்கில் இருந்து ரத்தம் கசியும் புதிய காய்
இன்னும் 20 ஆண்டுகளில் பிரித்தானியாவில் பிறக்கும் கால்
தென்கிழக்கு ஆசியாவில் சீனா தனது அதிகாரத்தை விரிவுபடு
உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால், அங்கிருந்து
சமீபத்திய ப்ளூம்பெர்க் கொவிட்-19 பின்னடைவு தரவரிசைப்ப
உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன் இணைவது குறித்து பெலார
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலா
