ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’. இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ‘லால் சிங் சட்டா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அமீர் கான் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். மேலும் இதில் அமீர் கானின் நண்பராக நடிக்க ஒப்பந்தமான விஜய் சேதுபதி, பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அப்படத்தில் இருந்து விலகினார்.
இந்நிலையில், விஜய் சேதுபதிக்கு பதிலாக அக்கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யா ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தில் அமீர்கான், நாகசைதன்யா இருவருமே ராணுவ வீரர்களாக நடிக்க உள்ளார்கள். கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை, ஜூலை மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.
நடிகர் நாகசைதன்யா நடிக்கும் முதல் இந்தி படம் இதுவாகும். அண்மையில் நடிகை சமந்தா, ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், தற்போது அவரது கணவர் நாக சைதன்யாவும் ‘லால் சிங் சட்டா’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்கள
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் சனம் ஷெட்டியுடன் பாலாஜி சண்டை
தமிழ் சினிமாவில் 90களில் சீரியல்களில் நடித்த பிரபலங்க
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனரா
தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேத
நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியாக ஓடிக் கொண்ட
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படம் கடந
பிரபல தெலுங்கு நடிகை காயத்ரி டாலி ஹோலி கொண்டாட்டம் மு
தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சியில் பாமக, வன்ன
இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் த
பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்த
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி
இயக்குனர் விக்
தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையாக தி
