பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்திர புராண படங்கள் அதிகம் தயாராகின்றன. மலையாளத்தில் ‘அரபிக் கடலின்டே சிம்ஹம்’ எனும் சரித்திர படத்தில் மோகன்லால் நடித்துள்ளார். தெலுங்கில் ராமாயண கதை ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் படமாகிறது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர். ரூ.500 கோடி செலவில் இப்படம் தயாராகிறது. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.
இந்நிலையில், இந்தியிலும் ராமாயண கதை ‘சீதா’ என்ற பெயரில் படமாகிறது. சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் சீதையாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். கதை கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள அவர், அப்படத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
வழக்கமாக ஒரு படத்துக்கு 6 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்கும் அவர், இப்படத்திற்காக சுமார் ஒரு வருடம் கால்ஷீட் தர வேண்டி இருப்பதால் ரூ.12 கோடி கேட்கிறாராம். படக்குழுவினர், அவர் கேட்ட தொகையை கொடுத்து ஒப்பந்தம் செய்வார்களா? அல்லது வேறு நடிகையை நடிக்க வைப்பார்களா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

டி.இமான் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில்
பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான் நடுத்தெருவில் நின்
1980களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் பூர்ணிமா பாக்யராஜ்
தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ படம் மூல
நேரம் படத்தின் மூலம் இளைஞர்களின் மன
‘திருடா திருடி’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமு
ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரி
நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து தனக
சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை
ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்
நடிகர் சித்தார்த் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு த
நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு
கமலின் விக்ரம் படம் ரிலீசாகும் அதே நாளில் தான் விஜய் ச
விஜய் தொலைக்காட்சி ட்ரேட் மார்க் நிகழ்ச்சியளில் ஒன்ற
