இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 10 வயது சிறுமி கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில், “சாமான்ய மக்களின் துயரங்களை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு ஆக்சிஜன் வினியோகத்தை சீர்படுத்த உத்தரவிட்டதைத் தெரிந்து கொண்டேன். நீதிமன்ற உத்தரவால் இன்று நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. நீதிபதிக்கு எனது நன்றி” என குறிப்பிட்டு இருந்தார்.
சிறுமியின் கடிதத்திற்கு பதிலளித்த தலைமை நீதிபதி ரமணா, “உனது கடிதத்துடன், நீதிபதியின் பணியை சித்தரிக்கும் மனதுக்கு இதமான ஓவியமும் கிடைக்கப் பெற்றேன். நீ வருங்காலத்தில் நிச்சயமாக விழிப்புடன் கூடிய பொறுப்பான குடிமகளாக வளர்வாய்” என பரிசு அனுப்பி பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நில
நாட்டின் பிற பகுதிகளை போலவே டெல்லியிலும் கொரோனா தொற்ற
ஜார்கண்ட் மாநிலம் தன்பாதில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ஏற்ற
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், 2 ந
நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள&nbs
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்ப
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் எழுந்துள்ள மோசமா
மகாராஷ்டிராவில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசிய
சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை
டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்க
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம்