தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.
திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த மீனா, தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார். இவர் கைவசம், ரஜினியின் ‘அண்ணாத்த’, திரிஷ்யம் தெலுங்கு ரீமேக் போன்ற படங்கள் உள்ளன.
இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: “எனக்கு வில்லி வேடத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது. சினிமா பார்வையாளர்களின் மன நிலை தற்போது மாறி இருக்கிறது. முன்பெல்லாம் கதாபாத்திரம் தனது இமேஜுக்கு பொருத்தமாக இருக்குமா? என்று யோசிக்க வேண்டி இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை.
நாம் நடிப்பது ஒரு கதாபாத்திரம் என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். எனவேதான் எதிர்மறை கதாபாத்திரம் உள்ளிட்ட வித்தியாசமான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். படையப்பா, தேவர் மகன் உள்பட பல வெற்றி படங்களை கால்ஷீட் பிரச்சினையால் தவற விட்டுள்ளேன். அது எனக்கு இப்போதும் வருத்தம் அளிக்கிறது.
அடிப்படையில் நான் ஒரு நடன கலைஞர். எனவே எனக்கு நடன காட்சிகளில் நடிக்க மிகவும் பிடிக்கும். பரதநாட்டிய கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க ஆர்வம் இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை.” இவ்வாறு மீனா கூறியுள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோ மூலமாக தான் தனது இர
பொன்ராம் இயக்கத்தில்
வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன்
தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர்
ஹேஷ்டேக் தினமான இன்று, இந்தியளவில் இந்தாண்டு ஜனவரி 1 மு
வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும் காமெடியன்களுக்க
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வல
பட்டாஸ் பட நடிகை Mehreen pirzada-வின் லேட்டஸ்ட் கலக்கல் க்ளிக்ஸ
பின்னணி பாடகர், நடிகர், என பல முகங்களை கொண்டு நம்மை மகி
தமிழ் சினிமாவில் 90களில் சீரியல்களில் நடித்த பிரபலங்க
தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபர
தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவ
நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு மிகப்பெ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா திரும