அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில், 2 லட்சத்து 8 ஆயிரத்து 90 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதன் முடிவுகளில் 1,968 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 85 ஆயிரத்து 39 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் 1,933 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 64 ஆயிரத்து 509 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியானார்கள். இதனால் அமீரகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,702 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 18 ஆயிரத்து 828 பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் விரைந்து கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்ப
அன்சோரேஜ்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அன்கரேஜ
உக்ரைன் மீது ரஷ்யா யுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ள நில
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 65 நாளாக சண்டையிட்டு
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும்
மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந
புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவுடனான சிறை பரிமாற்றத்தில
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா,
ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங
கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில், துப்பாக்கி முனையில் தன
உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான
உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நகர்வுகள் திட்டமிட்ட