More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கூட்டமைப்பிலிருந்து விலகும் முடிவில்லை – சித்தார்த்தன்
கூட்டமைப்பிலிருந்து விலகும் முடிவில்லை – சித்தார்த்தன்
Jun 14
கூட்டமைப்பிலிருந்து விலகும் முடிவில்லை – சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கட்சிகள் சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்பட இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை.



– என்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.



யாழ். கந்தரோடையில் உள்ள அவரது வீட்டில் நேற்று ஊடகங்களைச் சந்தித்துப் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கட்சிகள் சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்பட இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை. அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்  குழுவுக்குள் இருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக நாங்கள் ரெலோவுடன் பல தடவைகள் பேசியுள்ளோம்.



நாடாளுமன்றத்தில் எமக்கான நேரப் பங்கீடு என்பது பல வருடங்களாகப் பிரச்சினைகளுக்குரிய ஒன்றாகவே காணப்படுகின்றது. எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரம் என்பது அரிதாகவே கிடைக்கின்றது. அதுவும் கஷ்டப்பட்டுப் பெறவேண்டியுள்ளது.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு பேசிய பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக முடிவை நாம் எடுப்போம்.



எங்களுக்கு வாக்களித்த மக்கள் மத்தியிலே எம் மீது தப்பான அபிப்பிராயமொன்று காணப்படுகின்றது. நாம் நாடாளுமன்றில் தங்கள் பிரச்சினைகளைப் பேசுவதில்லை என அவர்கள் நினைக்கின்றனர். ஆகவே, இந்த விடயத்தில் கவனமெடுத்துச் செய்ய வேண்டிய தேவையுள்ளது.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமான பேச்சாளரோ அல்லது கொறடாவோ இல்லை. உத்தியோகப்பற்ற வகையிலேயே அவை செயற்படுகின்றன. இவற்றைச் சீர்செய்யுமாறு சம்பந்தனிடம் பல தடவைகள் கேட்டிருந்தேன். ஆனாலும், அவை சீர்செய்யப்படவில்லை. அதனால்தான் இவ்வளவு பிரச்சினைகள் உருவாகின்றன – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct25

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற

Apr17

அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட பà¯

May03

நிதியமைச்சர் பதவியை வகிப்பது எனக்கு இலகுவானதாக இருக்à

Jul17

ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டிருந்த கà

Jul04

கொவிட் பரவலையடுத்து வவுனியா நகரில் 8 கடைகள் சுகாதாரப் à

Jun12
May03

இலங்கையில் நாளைய தினம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுமà

Mar15

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான

Feb09

நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுà

Oct06

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்

Jul14

காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிà®

Oct02

இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழகà¯

Oct16

56 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு நேற்று அம்பாறை à

Mar26

மத்திய வங்கியின் இரண்டாம் பிணைமுறி மோசடி வழக்கில், முà®

Jul01

அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அà®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (10:19 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (10:19 am )
Testing centres