More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மலையக மக்களின் இருப்புக்கும் சமஷ்டி முறைமையே பாதுகாப்பு - கஜேந்திரன்
மலையக மக்களின் இருப்புக்கும் சமஷ்டி முறைமையே பாதுகாப்பு - கஜேந்திரன்
Jun 14
மலையக மக்களின் இருப்புக்கும் சமஷ்டி முறைமையே பாதுகாப்பு - கஜேந்திரன்

ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். சமஷ்டி முறைமை வருகின்றபோது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும்.



என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.



பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பகுதிகளில் உள்ள சுமார் 600 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நேற்று (13) முன்னெடுத்திருந்தது. இந்த நிவாரண ப் பொருட்களை வழங்கி வைத்ததன் பின் சமகால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே கஜேந்திரன் . மேற்கண்டவாறு கூறினார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-



பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தோம். அதேபோல் மலையக மக்களுக்கான காணி மற்றும் அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்போம்.



இந்த நாட்டில் ஒற்றையாட்சி முறைமையை ஒழிக்கப்பட்டு சமஷ்டி முறைமையை உருவாக்கும் அரசமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே போராடி வருகின்றோம். அவ்வாறு சமஷ்டி முறைமை வருகின்றபோது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும். மலையக மக்களுடன் இணைந்து பயணிக்க நாம் தயார்.



கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, சீனாவின் முகவர்களாகச் செயற்பட்டு நாட்டின் வளங்களை விற்கின்றது. பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு உயரும் வகையில் செயற்பட்டு வருகின்றது. மக்கள் நலன் பற்றி இந்த அரசு சிந்திப்பதில்லை. அவ்வாறு சிந்தித்திருந்தால் இவ்வாறு எரிபொருட்களின் விலை உயர்வடைந்திருக்காது.



செலன இணைந்த நிறுவன திட்டத்தின் ஊடாக கொழும்பிலுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை சீனாவுக்கு வழங்க ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. தென்பகுதியைத் தாரைவார்ப்பது மட்டுமல்லாமல் வடக்கில் 7 ஏக்கர் காணியிலுள்ள ஜனாதிபதி மாளிகையும் குத்தகைக்கு வழங்க அரச தரப்பினர் முயற்படுகின்றனர்- என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun26

நாட்டில் அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்à

Jan30

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சுà

Sep23

நாடாளுமன்றில் கடந்த 20 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட தேசà

Feb02

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக &nb

Apr01

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செலà

Jun03

சில நாட்களுக்கு முன்பு, குஜராத் மாநிலம் ஹசிராவில் இருà®

Feb23

இம்முறைகச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்இறுà®

Sep07

யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டà¯

Sep20

நாட்டிற்கு இம்மாதம் முதல் 15 நாட்களில் வருகைத் தந்த சுற

Jan27

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு (Sarat

May16

வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதி

Sep23

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மஸ்கெலியா

Oct20

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போà

Jun03

இலங்கை, இணக்கமான பிரிவினைக்கு இணங்கினால், இலங்கையின் 52

May11

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடுà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (07:32 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (07:32 am )
Testing centres