மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைகள் உள்ளிட்ட ஒன்பது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு செல்லும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது சுகாதார அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில், இலங்கையில் தேசிய மருத்துவமனைகளில் காணப்படும் மருத்துவ சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சை மற்றும் ஆய்வுகூட வசதிகளுக்கு சமமான வசதிகளை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட மருத்துவமனை ஒன்றை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய, தற்போது மாகாண சபைகளால் நிர்வகிக்கப்படுவதும் மூன்றாம் நிலை சுகாதார சேவைகள் நிறுவன வகைப்படுத்தலின் கீழ் காணப்படும் மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டி, அவிஸ்ஸாவெல, கம்பஹா, மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளின் சேவை வழங்கலின் தரம், சமத்துவம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றை அதிகரிப்பதற்காகவும் இலகுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் அவற்றை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவது பொருத்தமென
இனங்காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, அந்நோக்கத்தை அடைவதற்காக குறித்த மாவட்ட பொது மருத்துவமனைகளை சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்த
புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்
வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங
கடந்த காலத்தில் டீசல் பயன்பாடு 54%, பெட்ரோல் பயன்பாடு 35% ம
பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடை
முல்லைத்தீவு – தண்ணி முறிப்பு பகுதியில் மின்னல் தாக
இலங்கையில் உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் நடைம
யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்தி
இரத்த இருப்பு குறைவடைந்து வருவதால் இரத்த தானம் செய்ய
கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு
கொவிட்-19 நோய்த்தொற்றினால், உலகில் மிகவும் சவாலுக்கு உள
கொழும்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர
நாட்டில் இதுவரை 2,472,807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்த
