கொரோனா-வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு இதுவரை 1 கோடியே 74 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 4 லட்சத்து 87 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
அந்த நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் அலட்சியப் போக்கே இந்த சுகாதார நெருக்கடிக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே கொரோனா வைரசை சாதாரண காய்ச்சலுடன் ஒப்பிட்டுப் பேசி வரும் போல்சனாரோ, கொரோனா-வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவது, மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை அவசியமற்றவை என்று கூறி வருகிறார். இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் அவர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சா பவுலா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் மாஸ்க் அணியாமல் வாகன பேரணியில் ஈடுபட்டார்.
இதையடுத்து சா பவுலா மாகாணத்தின் நிர்வாகம், கொரோனா தடுப்பு விதிமுறைகளைமீறி மாஸ்க் அணியாமல் அதிக அளவில் ஆட்களைத் திரட்டி பேரணியில் ஈடுபட்டதாகக் கூறி அதிபர் போல்சனாரோவுக்கு 100 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,300 ) அபராதம் விதித்துள்ளது.
இங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர்
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் பொருளாதார சீர்கேடு, கொ
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள ந
உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத்
இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர்
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ராணுவ மற்றும் வெளி
சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக
138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்று
இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா, மற
தமது நாட்டில் உற்பத்தியை நிறுத்தியுள்ள வெளிநாட்டு நி
ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை கண்ட
உக்ரேனிய தேசிய பாதுகாப்பு சேவையின் மூத்த உறுப்பினர்க
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார்.