பிரிட்டனில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பருவநிலை மாற்றம், பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்று, புவிசார் அரசியல் குறித்து விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக பெருந்தொற்று காலத்தில், பணக்கார நாடுகளான ஜி7 நாடுகள், உலகின் பிற நாடுகளுக்கு தடுப்பூசியை நன்கொடையாக வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், உலகின் பிற நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் என பிரிட்டன் அறிவித்துள்ளது. அமெரிக்கா 50 கோடி தடுப்பூசிகளை அளிக்கப் போவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது.
பிரிட்டன் தங்களிடம் உபரியாக உள்ள சுமார் 10 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசியை வழங்கும் என்று அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
முதல் 50 லட்சம் டோஸ்கள் வரும் செப்டம்பர் மாதத்துக்குள்ளாகவும் மேலும் 2.5 கோடி டோஸ்கள் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் - ஜோ பைடன்
இதில், ஐநா ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள கோவாக்ஸ் திட்டத்தின்கீழ், சுமார் 80 சதவீத தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், மீதமுள்ளவை இருதரப்பு ரீதியாக பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அ
உக்ரைன் - ரஷ்யா இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பிராந்தியங்களில் நிலவ
உக்ரைன் மீது ரஷ்ய போர்க் கப்பல் சரமாரி ஏவுகணை தாக்க
நேட்டோ என்று அழைக்கப்படும் ‘வடக்கு அட்லாண்டிக் ஒப்ப
ரஷியாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு
டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் இந்திய அளவில் க
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்துக்கு வந்த சமய
ஏரோஃப்ளோட் விமானம்
ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 61 மருத்துவ ஐ.நா.சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் முன்ன அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய நாள் முதல் அங்கு வசித இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நிரந்தமா
