சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வயிற்றில் அடிப்பது போலாகும். இதனை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கொரோனா காலத்தில் மத்திய அரசின் அலட்சியத்தால் பண பரிமாற்றம் செய்யாததால் வருமானம் இழப்பு, வேலை இழப்பு, வேலை குறைப்பு மற்றும், சுய வேலைவாய்ப்புகள் அறவே நின்று போனதாலும், வர்த்தக நிறுவனங்கள் அடைப்பாலும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நடுத்தர வர்க்கத்தில் மேலடுக்கு, கீழடுக்கு என இரண்டு உண்டு. நான் கீழ் அடுக்கில் உள்ள 404 பேரை ஆய்வு செய்து ஆய்வின் அறிக்கையினை ஊடகங்களுக்கும் தந்திருக்கிறேன். கீழடுக்கு நடுத்தர வர்க்க மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சியில் 27 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு மேலே உயர்த்தப்பட்டனர். உலக வங்கியும், ஐ.நா.வும் தனது அறிக்கையில் இதனை சொல்லி இருக்கிறது. இன்றைய ஆய்வில் கூறுவது 21 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுவிட்டனர். இதற்கு காரணம் பிரதமர் மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரியில் தினசரி கொரோனா பரவல் 100-க்கு கீழ் குறை சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் அடிக்கட தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில்
கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், கொர உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை தற்போது வெளிய இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் இந்தி தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவ விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகா திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா ஆவார். இவர் நேற்று தனத வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள்
