இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 21ஆம் திகதி தளர்த்துவதா? இல்லையா? என்பது குறித்து ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறவுள்ள கொரோனாத் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார்.
கடந்த மே 21 ஆம் திகதி நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாட்டை யூன் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்துவதற்குக் கடந்த வாரத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய திரிபு வைரஸுடன் சமூகத்தில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை, கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் பயணக் கட்டுப்பாட்டை இப்போதைக்குத் தளர்த்த வேண்டாம் என்று விசேட மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், இது குறித்து இதுவரையில் முடிவெடுக்கவில்லை என்றும், நாட்டின் கொவிட் தொற்றுப் பரவல் நிலைமை குறித்து மீளாய்வு செய்த பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும், இதன்படி இன்று கூடும் கொரோனாத் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர
பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் அனுமதி பெற்று திறக
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்து தூதுவர் மை
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நா
இலங்கையில் நாளாந்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற
நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொரு
தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்கான முன்வரு வோம் என
எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் ஏற
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுர்ச்சி பேரணி&
இன்று நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமு
இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொ
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட
இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக
