உலகிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளில் மட்டுமே போலியோ நோய் பாதிப்பு இன்னமும் இருந்து வருகிறது.
இதனால் ஆப்கானிஸ்தான் அரசு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசியை செலுத்தி வருகிறது.
இதனிடையே ஆப்கானிஸ்தானில் காலூன்றி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு போலியோ தடுப்பூசி குழுவின் உறுப்பினர்களை குறிவைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள நங்கார்ஹர் மாகாணத்தின் தலைநகர் ஜலாலாபாத்தில் கடந்த சில நாட்களாக போலியோ தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை ஜலாலாபாத்தில் போலியோ தடுப்பூசி குழு உறுப்பினர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
ஈரான் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை கொடுத்து உதவியத
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தி இளவரசி
இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் ம
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளது. ரஷியா உடனான இந
உக்ரைனில் உக்கிர தாக்குதலை முன்னெடுத்துவரும் ரஷ்ய து
மறைந்த தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலிக்கு இறுதி அஞ்ச
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக
சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 26வது நாளை எட்டி
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் அதிபர
மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன
ஓர் ஆண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்க
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொட