அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், சரளா வித்யா நாகலா என்பவரை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இந்தப் பெண் சிவில் உரிமை வக்கீல் ஆவார்.
இந்த பரிந்துரையை செனட் சபை ஏற்று அங்கீகரித்தால், கனெக்டிகட் மாகாணத்தில், கனெக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் தெற்காசியாவை சேர்ந்த ஒருவர் அமர்வது இதுவே முதல் முறை ஆகும்.
செனட் சபையில் ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் தலா 50 இடங்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பான்மையை தீர்மானிக்க துணை ஜனாதிபதி, ஓட்டு போட முடியும். எனவே 51 வாக்குகளுடன் சரளா வித்யா நாகலாவின் நியமனம் செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரளா வித்யா நாகலா, 2017 முதல் அதே கனெக்டிகட் மாகாணத்தில், கனெக்டிகட் மாவட்ட அட்டார்னியின் அலுவலகத்தில் குற்றப்பிரிவில் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார். முதலில் இவர் 2012-ல் அமெரிக்க அட்டார்னி அலுவலகத்தில் சேர்ந்து, வெறுக்கத்தக்க குற்றங்கள் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
2010-12 காலகட்டத்தில் சான்பிரான்சிஸ்கோவில் முங்கர் டோல்ஸ் அண்ட் ஓல்சனில் பணியாற்றி உள்ளார்.
இவர் 2008-09 கால கட்டத்தில் 9-வது அப்பீல் கோர்ட்டு நீதிபதி சூசன் கிராபரின் சட்ட எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் நாளுக்கு ந
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்
மியான்மரில் 76 ஆயுதப்படை தினம் கொண்டாடப்பட்ட அதே நேரத
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதிய பழிவாங்கும் பொரு
காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ம
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேஸ்புக் டுவ
உக்ரைனில் உக்கிர தாக்குதலை முன்னெடுத்துவரும் ரஷ்ய து
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் கடந்த 5
இந்தோனேசியா நாடு நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும்
தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் தாக்குதல் ஒரு மாத இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை வ ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை தெரியப்படுத்த புதிய சார்
