மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த தொண்டர்கள் பலர் கூட்டம் கூட்டமாக மீண்டும் திரிணாமுல் காங்கிரசுக்கு திரும்பி வருகின்றனர்.
அந்தவகையில் பிர்பும் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜனதா தொண்டர்கள் 150 பேர் நேற்று திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். இதற்காக இளம்பஜார் பகுதியில் மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
பா.ஜனதாவில் இருந்து விலகிய தொண்டர்களை அதில் நிறுத்தி அவர்கள் மீது கிருமிநாசினி(சானிடைசர்) தெளிக்கப்பட்டது. அதன்பின்னர் உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், அவர்களுக்கு தங்கள் கட்சிக்கொடியை வழங்கி கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
இது குறித்து உள்ளூர் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘பா.ஜனதாவில் பணியாற்றியவர்களை மீண்டும் ஏற்பதற்கு முன் அவர்களை தூய்மைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது’ என்று தெரிவித்தார்.
முன்னதாக ஹூக்ளி மாவட்டத்தை சேர்ந்த 200 பேர் சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்திருந்தனர். அப்போது அவர்கள் தங்கள் தலையை மொட்டையடித்துக்கொண்டனர். பா.ஜனதாவில் இணைந்து தாங்கள் செய்த பாவத்துக்கு பரிகாரமாக இதை மேற்கொண்டதாக அவர்கள் கூறினர்.
பிரதமர் மோடியை என்னதான் கொரோனா தொற்று விவகாரத்தில் எத
சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்ப இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாள இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சி இந்தியா 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1.3 ஜிகாவோல்ட் சூரி தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பா இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு த கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு கடந்த 2 முறை சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியை க அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என்
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் த
