ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அமெரிக்கா கூறி வருகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் அமெரிக்கா ரஷியா மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இந்த சூழலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் ரஷிய அதிபர் புதினை முதல் முறையாக நேரில் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது அவர் அலெக்சி நவால்னி விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பினார். ஆனாலும் இந்த பேச்சுவார்த்தை இணக்கமாக நடைபெற்றதாக புதின் தெரிவித்தார்.இந்த நிலையில் அலெக்சி நவால்னி விவகாரத்தில் ரஷியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘அலெக்சி நவால்னி வழக்கில் ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளின் மற்றொரு தொகுப்பை நாங்கள் தயார் செய்து வருகிறோம். நாங்கள் சரியான இலக்குகளை பெற தொகுப்புகளை உருவாக்கியுள்ளோம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பொருளாதார தடை அறிவிப்பு வெளியாகும். அதைசெய்யும்போது ரசாயன ஆயுதங்கள் தொடர்பாகவும் மேலும் பொருளாதார தடைகளை விதிப்போம்’’ என கூறினார்.
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களுக்கு பொ
இந்தோனேசியாவில் 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க
அமெரிக்காவில் ரிச்மன்ட் நகரில் உள்ள வீடொன்றில் மனித உ
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்க
சீனா உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போத
அமெரிக்கா தலைமையிலான அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக்
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தட
ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல்கள் மேரியோபோல் நகரையே
உலகளவில் தற்போது 100,839,430 பேருக்கு கொரோனா வைரஸ்
இந்தோனேசியாவில் இராட்சத அலையில் சிக்கிய 11 பேர் உயிரிழ
அமெரிக்காவில் முதன்முதலாக இணை அட்டார்னி ஜெனரல் பதவிய
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை
சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன்முதலில் மனிதனை