மகாராஷ்டிராவில் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் 3-வது அலை ஏற்படும் அபாயம் இருப்பதாக மாநில சுகாதாரத்துறை கடந்த வாரம் எச்சரித்து இருந்தது. இந்தநிலையில் மாநிலத்தில் 21 பேர் டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.
இதுகுறித்த தகவலை மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறினாா். இதில் அவர், "மாநிலத்தில் அதிகபட்சமாக ரத்னகிரியில் 9 பேர் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜல்காவில் 7 பேரும், மும்பையில் 2 பேரும், பால்கர், தானே, சிந்துதுர்க்கில் தலா ஒருவரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்து 500 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. அப்போது மாதிரிகளின் மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தான் 21 பேருக்கு உருமாறிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாதிரிகள் கடந்த மே 15-ந் தேதி முதல் சேகரிக்கப்பட்டவை ஆகும். தற்போது தொற்று பாதித்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து வருகிறோம். மேலும் அவர்களின் முந்தைய பயண விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. உருமாறிய டெல்டா பிளஸ் வைரசை கட்டுப்படுத்த முடியும்’’ என்றார்.
காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் மஜீன் கிராமத்தில
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சு
மராட்டியத்தில் இந்த மாதம் முதல் வாரம் வரை கொரோனா பாதி
புதுடெல்லி இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ப
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவதில் வெளிப்
குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்
டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்ற
ராகேஷ் அஸ்தனாவை டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நி
சென்னை ரைஃபிள் கிளப் நடத்திய 46- வது மாநில அளவிலான துப்ப
ரஷ்ய உக்ரைன் போர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு, இந்தி
நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக் கோன் ஜெயந்திவிழா