குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்தவகையில், இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஷ்வினும், புகழும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என தலைப்பு வைத்துள்ளனர்.
இப்படத்தில் அஷ்வின் ஹீரோவாகவும், புகழ் காமெடியனாகவும் நடிக்கின்றனர். விளம்பர படங்களை இயக்கி பிரபலமான ஹரிஹரன் இப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். விவேக் - மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் இப்படம், காதல், காமெடி கலந்து உருவாக உள்ளது. இப்படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை 19-ந் தேதி சென்னையில் தொடங்க உள்ளது.
விஜய் டிவி பிரபலமான தொகுப்பாளினி பிரியங்காவுக்கு தனி
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா மு
தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், பாண
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தி
தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேத
தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சியில் பாமக, வன்ன
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொ
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்
விஜய் தொலைக்காட்சியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்ப
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவுக்கு உண்மையா
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆ
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி