இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தென்கிழக்குப் பகுதியான நியுவிங்டன் என்ற இடத்தில் எலிபண்ட் அன்ட் காசல் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
இந்நிலையில், எலிபண்ட் அன்ட் காசல் ரெயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரெயில்வே வளைவுகளுக்கு அருகிலுள்ள 3 வணிக வளாகங்கள், 6 கார்கள் மற்றும் தொலைபேசி பெட்டி ஆகியவை எரிந்து நாசமானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. 100க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடினர். தீ விபத்தால் ஏற்பட்ட புகையால் அப்பகுதி முழுக்க கரும்புகை பரவியது.
இதனால் அருகில் இருக்கும் வீடுகளில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூட வலியுறுத்தப்பட்டனர். தீ விபத்து குறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டன.
உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என தீயணைப்பு வீரர்கள் கூறினர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கும் இடை
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி தலைநகர் கா
உக்ரைனின் மரியுபோல் நகரில் அத்துமீறி நுழைந்து தாக்கு
கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்
கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணி
ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் இருக்கும் இராண
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இஸ்ரேல் 34வ
மியன்மாரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான்
வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 25 ஆவது நாளாக நீடித்த
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்ச
உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோன
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்க
இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர