இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பூசியின் 20 கோடி டோஸ்களை வாங்குவதற்காக பிரேசில் அரசு கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் பிரேசில் நாட்டின் தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம், கோவேக்சின் தடுப்பூசிக்கான இறக்குமதி கோரிக்கைகளை மறுத்தது.
விரிவான ஆய்வுக்கு பிறகே பிரேசிலில் தடுப்பூசி இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என்ற சூழல் உருவானது. இதன் காரணமாக ஒப்பந்தத்தின்படி, தடுப்பூசி டோஸ்கள் பிரேசிலுக்கு அனுப்பப்படவில்லை. இதற்கிடையில் தடுப்பூசி ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஏற்கனவே அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டியதாக அவர் மீது கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து அவருக்கு எதிரான முறைகேடு புகார் குறித்த விசாரணை தற்போது நடந்து வரும் நிலையில், கோவேக்சின் 20 கோடி டோஸ்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் மார்சிலோ கெய்ரோகா அறிவித்துள்ளார்.
ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்
மத்திய இத்தாலியின் ஒரு பகுதியில் திருமணம் செய்து கொள்
இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உ
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபத
ஜப்பானை தடம் புரட்டிய சக்தி வாய்ந்த புயலால் குறைந்தது
உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புதினை கட
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் கடும் பனிப
அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதா
இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் உலகில் ஏனைய நாடுக
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்
வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மதிக
உக்ரைன் - ரஷ்யா இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை
அபுதாபி பகுதியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு
இந்தோனேசியாவில் மத்திய சுலவேசி மாகாணத்தில் நேற்று மு
