தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா.
இவர் தனது 9 ஆண்டு கால பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஜேக்கப் ஜூமா தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்த போதும் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி அவரை பதவி விலக வலியுறுத்தியது.
இதையடுத்து 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேக்கப் ஜூமா அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தென் ஆப்பிரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டு ஜேக்கப் ஜூமா மீதான ஊழல் வழக்குகளை பல மாதங்களாக விசாரித்து வருகிறது.
இந்த சூழலில் ஊழல் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி ஜேக்கப் ஜூமாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜேக்கப் ஜூமா கோர்ட்டை அவமதித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் மீதான இறுதி விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. அப்போது ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்க
அமெரிக்காவில் 2,600 விமான சேவையை தனியார் நிறுவனம் ரத்து ச
சர்வதேச பெண்கள் தினம் நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது
ஜெர்மனி நாட்டின் பிராங்க்பிரட் நகரில் சர்வதேச விமான ந
கொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவ
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும்
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏவுகணைகள் தாங்கிய போர்
15 நாட்களுக்குள் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற ரஷியா
கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிர
ரஷ்யா போர்க்கப்பலை உக்ரைன் படைகள் குண்டு போட்டு தகர
அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத
ஆப்கானிஸ்தானில் கணவர் துன்புறுத்துவதாக கூறி ஏராளமான
ஆர்ஜென்டினாவில் கொரோனாத் தொற்றுப் பலவல் காரணமாக அந் ந
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெற
