நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், 2-வது கட்ட படப்பிடிப்பை மே 3-ம் தேதி சென்னையில் தொடங்கத் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது.
தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பீஸ்ட் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. தனியார் ஸ்டூடியோ ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில், விஜய்- பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகின்றன.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம் காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகி வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சம
அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் புதிய படம் 'யூக
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி
தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே
தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அத
அஜித்தின் வலிமை படம் பிரம்மாண்டமாக நேற்று எல்லா இடங்க
சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்த
இனி வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படு
ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றியும், த
ஆஸ்கார் நாயகன் முதல் படத்தில் வாங்கிய சம்பள விவரம் வெ
நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பி
நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு இன்று வரைக்கும்
ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே தற்போது ஹ
நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் க
