உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு பரிசோதனைகளை உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இதற்கான பிரத்யேக கருவிகளும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் முககவசம் மூலமே கொரோனாவை கண்டறியும் வழிமுறை ஒன்றை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து வடிவமைத்து உள்ளன.
அந்தவகையில் கொரோனா வைரசை கண்டறியும் பிரத்யேக சென்சார் பொருத்தப்பட்ட முககவசங்களை இந்த நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் வடிவமைத்து உள்ளனர். இந்த முககவசம் அணிபவரின் மூச்சுக்காற்றை பரிசோதித்தே இந்த சென்சார்கள் தொற்றை உறுதி செய்து விடுகின்றன. அணிந்தவருக்கு தொற்று இருக்கிறதா? இல்லையா? என்ற முடிவை 90 நிமிடங்களில் இது வெளிப்படுத்துகிறது.
சிறிய மற்றும் எளிதில் அகற்றக்கூடிய இந்த சென்சார்களை மற்ற முகமூடிகளிலும் பொருத்த முடியும். இதைப்போல பிற வைரஸ்களை கண்டறியும் வகையிலும் இவற்றை மாற்றியமைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இது ஒரு முக்கிய மைல்கல் கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். (56), தன்னை விட 24 வய
இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே உள்ள லனுவியோ என்ற
ரஷ்ய நகரமான கசானில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பா
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ம் தே
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து சுமா
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பினப் பெண் உரு
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரின் கருத்து சு
அமெரிக்காவின் 71ஆவது வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி பிளி
உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவியுள்ள நிலையில், ரஷ்ய
இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமானது நீர்மூழ
மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்
அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி இந்திய நேரப்ப
கைகளுக்கும் முகத்திற்கும் இரட்டை மாற்று அறுவைச் சிகி
வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம்
