மைசூரு மிருகக்காட்சி சாலை ஊழியர்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மைசூரு மிருகக்காட்சி சாலையில் நடந்தது.
இதில் கர்நாடக பாஜக துணை தலைவரும், முதல்-மந்திரி எடியூரப்பாவின் இளைய மகனுமான விஜயேந்திரா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவார் என்பது முடிந்து போன கதை. அதனால் முதல்-மந்திரி மாற்றம் குறித்து யாரும் பேச வேண்டாம். மீதம் உள்ள 2 ஆண்டுகளும் எடியூரப்பா தான் முதல்-மந்திரியாக இருப்பார். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
கர்நாடக பாஜகவினர் டெல்லிக்கு சென்றால் தலைமை மாற்றம் குறித்து தான் பேச போகிறார்கள் என்று அர்த்தமா?. டெல்லிக்கு செல்பவர்கள் அவர்களது சொந்த வேலையாக கூட செல்லலாம். டெல்லிக்கு செல்ல கூடாது என்ற எந்த நிபந்தனைகளும் இல்லை. இதனால் கா்நாடக பா.ஜனதாவினரின் டெல்லி பயணத்திற்கு யாரும் அரசியல் சாயம் பூச வேண்டாம்.
தேர்வு எழுதி உள்ளேன். முடிவுக்காக காத்து இருக்கிறேன் என்று மந்திரி சி.பி.யோகேஷ்வர் கூறி உள்ளார். அவரது கருத்தை பற்றி விவாதம் நடத்த வேண்டியது இல்லை.
கர்நாடக பாஜக மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கர்நாடகம் வந்து எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி சென்று உள்ளார். தேசிய தலைவர்களும் எடியூரப்பா ஆட்சியை பாராட்டி உள்ளனர்.
உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனை
சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர
தேசிய கல்விக்கொள்கையில் 2019-ம் ஆண்டு பல்வேறு திருத்தங்
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு விசேட ஏற்பாட
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஜஸ்தா
பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கட்டுமான பொருட்களை ஏற்
கடந்த 2020-ல் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டவர்களில் ர
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அற
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உள
இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாத
ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ச
