இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு வெகுவாகக் குறைந்தது. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து, கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மாஸ்க் விதிமுறைகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டன.
கொரோனா வைரஸ் பரவல் மிகவும் குறைந்ததையடுத்து, பொது இடங்களில் உள்ள உள்அரங்கங்களில், மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை என கடந்த 15ம் தேதி சுகாதாரத்துறை தெரிவித்தது. இதனால் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.
இந்நிலையில், கடந்த 4 தினங்களாக புதிய பாதிப்பு 100ஐ தாண்டியது. நேற்று 227 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மீண்டும் மாஸ்க் தொடர்பான விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மக்கள் இனி பொது இடங்களில் உள்ள உள்அரங்கங்களுக்கு சென்றால் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முதலில் காணப்பட்ட கொரோனா வைரசின் டெல்டா மாறுபாடு காரணமாக, இஸ்ரேலில் பாதிப்புகள் அதிகரித்திருக்கலாம் என தொற்றுநோய் பணிக்குழு தலைவர் நாச்மேன் ஆஷ் கூறினார்.
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 150-வது நாளை நெருங்க
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம
ரஷியா போர் தொடுத்துள்ள உக்ரைன் பகுதிகளில் பொதுமக்களை
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் இன்று காலை மர்ம நபர் திடீ
ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சத்தில் இரண்டு முன்னாள்
கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரி
அபுதாபி தடுப்பூசி மையத்தின் இயக்குனர் டாக்டர் கோசி ஜா
மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந
சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்
உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசின் புதிய மாறுபாடு
ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்த உலகின் அதிவேக ஏவுகணை
உக்ரைன் கிழக்கில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பாடச
உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனத