More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பொய் வழக்குகளை சட்டரீதியாக சந்திப்போம் திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்!
பொய் வழக்குகளை சட்டரீதியாக சந்திப்போம்  திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்!
Jul 04
பொய் வழக்குகளை சட்டரீதியாக சந்திப்போம் திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்!

பொய் வழக்கு தொடர்வதில் நாட்டம் செலுத்தி வரும் திமுக அரசு , மக்கள் விரோதப் போக்கை , ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரு.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் எங்களுக்கு வாக்களித்திருக்கும் பார்க்காதவர்களுக்கு நடுநிலையாக இருந்து செயலாற்றுவோம் என்றார். திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நிறைவேற்றுவோம், முதல் கையெழுத்துயிடுவோம் என்று கூறிய பல முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதையும் திமுக அரசு மற்றும் அமைச்சர்களாக உள்ள அவர்களின் செயல்பாடுகளை நியாயமான முறையில் சமூக வலைத்தளங்களுக்கு ஊழியர் கருத்து சுதந்திரத்தின் படி மக்கள் மத்தியில் எடுத்துச் சல்லும் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச்சேர்ந்த நிர்வாகிகளை காவல்துறையை வைத்து இந்த அரசை தரக்குறைவாக விமர்சிப்பதா கூறி வழக்கு பதிவு செய்கிறார்கள்.



இவ்வாறு நியூஸ் ஜெ செய்தி தொலைக்காட்சி உட்பட தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பலர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் 120 கழக உறுப்பினர்கள் இடம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உங்கள் பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என்றும் திரட்டி வருகிறார்கள். மேலும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திமுகவின் நடவடிக்கைகளை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் ஆகும். இப்போது வழக்கு போடப்படுகிறது. அப்போது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இப்போது ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்று நினைப்பது கண்டிக்கத்தக்கது.



தமிழ்நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொள்வதை விடுத்து பொய் வழக்கு தொடர்வதில் நாட்டம் செலுத்தி வரும் திமுக அரசு , இத்தகைய மக்கள் விரோதப் போக்கை , ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்களால் அதிமுக கழகத்தையும், அதன் ஒன்றரை கோடி தொண்டர்களையும் அடக்கி ஒடுக்கி விடலாம் என்று திமுக ஆட்சி யாளர்கள் கருதினால் அது பகல் கனவாகவே முடியும்.



முதல்வராக இருந்த என் மீதும் , கழக நிர்வாகிகள் மீதும் மிக மிக கேவலமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும், நரகல் நடையிலும், நாராசமாக திமுகவின் தலைமை முதல் கடைசி பேச்சாளர்களை கடந்த பல ஆண்டுகளாக அவதூறு பரப்பி வந்ததை மக்கள் அறிவார்கள். இதனால் மன உளைச்சல் அடைந்த அவர்கள் கூறிய நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு தொடர்ந்தால் ,எங்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை ,கருத்துரிமையில் அரசு தலையிடலாமா என்றெல்லாம் உரக்கக் கூச்சலிட்டனர். அந்த வழக்குகளை தள்ளுபடி செய்யும்படி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.



திமுகவினர் தங்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும், மற்றவர்களுக்கும் உண்டு என்பதை வசதியாக மறந்து விட்டு தற்போது ஆட்சி அதிகாரம் கைக்கு வந்துவிட்டது என்று காவல்துறையின் மூலம், சென்று பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட, காவல் தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டப்பட்டு தற்போது கழகத் தொண்டர்களுக்கு எஃகு கோட்டையாக பாதுகாக்கப்படும் கழகத்திற்கு எதிரான அடக்குமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும். திமுக அரசின் அடக்கு முறைகளையும், பொய் வழக்குகளையும் சட்டரீதியாக சந்திக்க கூடிய வல்லமை அதிமுகவிற்கும், அதன் சட்ட பிரிவுகளுக்கும் உண்டு என்பதை ஆட்சியாளர்கள் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar21

கேரளாவில் ஏழைகளுக்காக 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படு

Jul30

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்

Jul13

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக பள்ள

Mar08

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந்

Jul29
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (19:52 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (19:52 pm )
Testing centres