வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்லை என அவரது தாயாரால் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பெண் கொக்குவெளி மகாறம்பைக்குளம் அரசடி வீதியில் வசிக்கும் 22 வயதான கண்ணன் வினித்தா என்பவரே காணாமல் போயுள்ளார்.
இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது.
குறித்த பெண் நேற்றுமுன்தினம் (04)ம் திகதி மாலை 6 மணியளவில் தனது அம்மாவின் வீட்டிலிருந்து அருகாமையில் உள்ள கடைக்கு சென்று முட்டை வேண்டி வருவதாக கூறிவிட்டு வெளியேறி சென்றுள்ளார். இந்நிலையில் பலமணிநேரங்கள் தாமதமாகியும் குறித்த பெண் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்கும் தொடர்பு கொண்டு கேட்ட போது அங்கும் அவர் செல்லாத காரணத்தினால் குடும்பத்தினர் நேற்று (05) வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்கள்.
குறித்த குடும்பபெண் திருமணம் முடித்து ஐந்து வருடங்களாக வாழ்ந்து வருவதாகவும் சில நாட்களாக கணவரை பிரிந்து தாயாருடன் வாழ்ந்து வந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் தொடர்பில் விபரங்கள் கிடைக்கப்பெற்றால் வவுனியா காவற்துறையினருக்கோ அல்லது கீழ் காணப்படும் தாெலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
தொடர்புகளுக்கு: 0765462984


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அடுத்த
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 31
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஐந்தம்ச கோ
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 2020 ஆம் ஆண்டில் வெளிநாட
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இரா
மே தின நிகழ்வுகளுக்கு தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்
ஒரு தனி நபரின் தேவைக்காக 22 வது அரசியலமைப்புத் திருத்தம
வடக்கு, கிழக்கில் எந்தவொரு பகுதியையும் தமிழ் மக்களின்
ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில்இ நிறை குறைந்த அதி
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில
மிக விரைவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பூ
வாய் முகம் மற்றும் தாடை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை
70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்க
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழர் தரப
