கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோ–விச் (செர்பியா), 20-ம் நிலை வீரரான கிறிஸ்டியன் காரினை (சிலி) சந்தித்தார்.
ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-2, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் கிறிஸ்டியன் காரினை தோற்கடித்து 12-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-5, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் இத்தாலியின் லாரன்சோ சொனாகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினி, கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவ், ரஷ்ய வீரர் கரென் கச்சனோவ் ஆகியோர் வெற்றியை ருசித்து காலிறுதிக்குள் கால் பதித்தனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 7-5, 6-3 என்ற நேர் செட்டில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான பார்போரா கிராஜ்சிகோவாவை (செக் குடியரசு) வெளியேற்றி முதல் முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்ற ஆட்டங்களில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா, பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா, துனிசியாவின் ஒன்ஸ் ஜாபிர் ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி கண்டனர்.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் ப
இந்திய வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்டில் எத்தனை ர
200 டெஸ்ட் போட்டிகளில் கடமையாற்றிய முதலாவது மத்தியஸ்தர
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றின் 17ஆவது போட்
20 உலக கிண்ண போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன
ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச ஓடி வந்த
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2023ஆம் மற்றும் 2025ஆம் ஆண்
ஐபிஎஸ் ஜூரம் ஆரம்பித்துவிட்டது. அணிகள் ஏலத்திற்குப் ப
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தி
இந்திய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின்
பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வர
அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைப
பிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன
