ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” என்ற திட்டத்தின்கீழ் கிராமிய தொழிற்துறையை விருத்தி செய்யும் விதமாக “சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்கள்” உருவாக்கப்பட்டுள்ளன
இன்றையதினம் இந்த செயற்றிட்டத்தின் தேசிய அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச, சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்களை நிகழ்நிலை தொழில்நுட்பத்தினூடாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்களில் ஒன்றான சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்ப பண்டத்தரிப்பு, பிரான்பற்று கிராமத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனால் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது பாரம்பரிய முறையிலான எள்ளெண்ணை உற்பத்தி தொழில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்தோடு பயனாளிகளுக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், சண்டிலிப்பாய் பிரதேச செயலக செயலாளர், கிராம சேவையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பிரான்பற்று கிராமத்தின் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியார் காலமாகியுள்ள
மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்ப
இலங்கை அண்மைக்காலமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்கு
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வன
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் இருந்த
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையினுள் இயங்கும் சிற்று
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்
கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமா
பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கும், பேணி வளர்ப்பதற்கும், பு
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாட
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத
இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்
