பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். திலீப் குமார் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் பிறந்தவர் ஆவார். இதனால் அவர் பாகிஸ்தானிலும் மிகவும் பிரபலமானவராக இருந்து வந்தார்.
அதுமட்டுமின்றி இந்திய- பாகிஸ்தான் மக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் உறவுப்பாலமாக அவர் திகழ்ந்தார்.
இந்த நிலையில் திலீப் குமார் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ,“ திலீப்குமார் காலமானதை அறிந்து வருந்துகிறேன். எனது தலைமுறையில் திலீப்குமார் மிகச் சிறந்த மற்றும் பன்முக நடிகராக இருந்தார். அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் புற்றுநோய் மருத்துவமனைகளை அமைப்பதற்கு நிதி திரட்ட தனது நேரத்தை வழங்குவதில் அவரின் தாராள மனப்பான்மையை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. பாகிஸ்தான் மற்றும் லண்டனில் அவரின் தோற்றம் மிகப் பெரும் தொகையை திரட்ட உதவியது” என தெரிவித்துள்ளார்.
பெஷாவர் நகரில் உள்ள திலீப்குமாருக்கு சொந்தமான வீட்டை தேசிய பாரம்பரிய சொத்தாக பாகிஸ்தான் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு ஐரோபிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் தனது எல்லையை
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவரை சிறுவன் ஒருவன்
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான
உலகில் மிகவும் தேடப்படும் தீவிரவாதி ஹக்கானி நெட்வொர்
உக்ரைனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு ர
அமெரிக்காவில் சிறப்பு பல்பொருள் அங்காடியொன்றுக்குள்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க விமானப் படையின் சி-17
நியூஸ்லாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில்
நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தா
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக அதி
