விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். பார்த்திபன், ரீத்துவர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பட வேலைகளை 2017-ம் ஆண்டிலேயே தொடங்கினர். வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.
படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில பிரச்சினைகளால் தள்ளிப்போனது. பின்னர் 2020-ல் வெளியாகும் என்று எதிர்பார்த்து அப்போதும் வரவில்லை. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மீண்டும் முடங்கியது.
இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்து வருவதால், படத்தை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் காட்சிகள் 4½ மணி நேரம் ஓடக்கூடிய வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே துருவ நட்சத்திரம் படத்தை பாகுபலி போன்று 2 பாகங்களாக வெளியிட படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரள பாப் பாடகர் வேடன் மீது சில பெண்கள் பாலியல் புகார்
தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையாக தி
நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவ
தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா, அருள்நீதி, மஞ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பராகி வந்த 7C சீரியல் மூலம
சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்த
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோ
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பானு. இவர் ஏராளமான மலையாள, த
தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும்,
2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருக
செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவ
நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற ர
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நேரத்தில் இந்தியா