More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் விசனம் தெரிவித்தார்!
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் விசனம் தெரிவித்தார்!
Jul 08
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் விசனம் தெரிவித்தார்!

நீதியரசர்கள் வரிசையாக விலகினால், தடுத்து வைக்கப்பட்டிருப்பவருக்கு பாரதூரமான அநீதி இழைக்கப்படலாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் விசனம் தெரிவித்தார்.



நாடாளுமன்ற உறுப்பினர்  ரிஷாத் பதியுதீன் தொடர்பான வழக்கில் நீதியரசர்கள் விலகி வருவது பற்றி அவர் மேலும் கூறியதாவது:-



இங்கு நீதி அமைச்சர் இந்த மசோதா சம்பந்தமாக நீண்ட விளக்கமொன்றை அளித்தார். இப்பொழுது ஒரு விடயம் தொடர்பில் புதியதொரு யூகம் ஏற்பட்டிருக்கின்றது.



நாங்கள் உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு எப்பொழுதுமே மதிப்பளித்து வருகின்றோம். வழக்கிலிருந்து விலகிக்கொள்வதற்கு அவர்கள் காரணங்களைக் கூறக்கூடும். ஆனால், இப்பொழுது நீதியரசர்கள் நால்வர் வரிசையாக வழக்கிலிருந்து விலகியுள்ளனர். இதில் தலையீடுகள் எவையும் இருந்திருக்க முடியாது.



இது பற்றி ஒரு நிலையான நெறிமுறை இருக்க வேண்டும். உயர்நீதிமன்ற பிரதம நீதியரசரும் அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும். அதாவது நீதியரசர் குழாத்தை நியமிக்கும்போது குறைந்த பட்சம் அது பற்றி குறிப்பிடப்பட்டு, அவ்வாறு வழமையாக இடம்பெறாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.



முன்னர் கூறியவாறு, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தொடர்பான வழக்கிலிருந்து இப்பொழுது நீதியரசர்கள் நால்வர் விலகி இருக்கின்றனர். அவர் தடுப்புக் காவலில் 73 நாட்களாக இருந்து வருகின்றார். இந்த மனித உரிமை வழக்கு இதே காரணத்தால் பல முறை ஒத்திப்போடப்பட்டுள்ளது.



இந்த விதமாக நீதியரசர்கள்  ஒருவர் பின் ஒருவராக தொடர்ச்சியாக விலகிக்கொண்டே போனால், அதன் விளைவாக இறுதியில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவருக்கு பாரதூரமான அநீதி இழைக்கப்பட்டதாக ஆகிவிடும்.



அவர் ஓர் சிரேஷ்ட அரசியல்வாதியாக இருப்பதனால் இந்த வழக்கின் தன்மையைப் பொறுத்து, ஒருவிதமான வித்தியாசமான தோற்றப்பாடு ஏற்படுக்கூடும். ஆகையால், பிரதம நீதியரசர், வழக்குக்கு நீதியரசர்களைத் தேர்ந்தெடுக்கும்போது இவ்வாறு நடந்து விடாதிருக்கப் பார்த்துக்கொள்ள வேண்டும் – என்றார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug21

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்à®

Oct01

சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவ

Mar25

உலகின் தலைசிறந்த கோடிஸ்வரர்கள் இலங்கைக்கு சுற்றுலா பà

Oct18

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இள

Apr26

நாட்டிற்கு பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தà¯

Jan13

60 வயதான முதியவரை சிலர் பாணந்துறை மாமுல்ல வீதி, தெல்கஸ்à®

Jan26

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்à

Mar07

நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுà®

Feb05

பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்à®

Mar17

நாட்டில் தற்போது ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களை செà

Oct14

யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இ

Sep24

68 உறுப்பு நாடுகளைக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின்

Sep08

கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலà

Apr04

  இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரச

Sep03

மட்டக்களப்பு வவுணதீவு காவற்துறை பிரிவிலுள்ள பாவக்கொà®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (11:34 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (11:34 am )
Testing centres