வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடந்து வருகிறது.
முதலில் பேட் செய்த வங்காளதேச அணி தொடக்க நாளில் 8 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்து இருந்தது. லித்தன் தாஸ் 95 ரன்னிலும், கேப்டன் மொமினுல் 70 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். மக்முதுல்லா (54 ரன்), தஸ்கின் அகமது (13 ரன்) களத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இருவரும் சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை வலுவாக உயர்த்தினார்கள்.
முதல் அரைசதத்தைக் கடந்த தஸ்கின் அகமது 75 ரன்னில் வெளியேறினார். 9-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 191 ரன்கள் திரட்டியது. டெஸ்ட் போட்டியில் இந்த விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட 2-வது அதிகபட்ச ரன் இதுவாகும்.
இறுதியில், வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 468 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. 5-வது சதத்தைப் பூர்த்தி செய்த மக்முதுல்லா 150 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 4 விக்கெட்டும், டிரிபானோ, நியுவாச்சி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி ஆட்ட நேரம் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரி
அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடை
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியா
சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு ம
சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் ப
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர
ஆர்சிபி-யின் புதிய கேப்டன் குறித்து அணி நிர்வாகம் இறு
சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர
ஐபிஎல் 15வது சீசன் தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை
அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, மீண்டும் தங
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர புதுப்பிக