தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா (வயது 79). இவர் தனது 9 ஆண்டு பதவிக்காலத்தில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்கு மறுத்து விட்டார். இது தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரித்த அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு அவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து கடந்த மாதம் 29-ந் தேதி உத்தரவிட்டது. அவர் சரண் அடைவதற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. இது அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் சரண் அடையாவிட்டால், கைது செய்யப்படுவார் என போலீஸ் எச்சரித்தது.
இந்த நிலையில் கெடு முடிவடையும் நேரத்தில் அவர் போலீசில் சரண் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அவரது மகள் டுது ஜூமா சம்புட்லா டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “எனது தந்தை சிறைக்கு சென்று கொண்டு இருக்கிறார். ஆனாலும் அவர் நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார்” என கூறப்பட்டுள்ளது. ஜேக்கப் ஜூமா அறக்கட்டளை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “ஜூமா சிறைவாச உத்தரவுக்கு இணங்க முடிவு செய்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் முன்னாள் அதிபர் ஒருவர் சிறைக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்த
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷ்யா ரத்து செய்த
2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம்
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலா
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித
சவுதி அரேபியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெள
உலக சந்தையில்
கோனாக்ரி: மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா, கடந்த 1958ம் ஆண மஸ்தார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் க இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் சையது சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர ரஷியா போர் தொடுத்துள்ள உக்ரைன் பகுதிகளில் பொதுமக்களை அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வீசிய 'இயான்' ப பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்கு