கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் (53), நேற்று முன்தினம் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த பயங்கர சம்பவத்தின்போது அவரது மனைவி மார்டின் மோயிஸ் படுகாயம் அடைந்தார்.
அவருக்கு அங்கு முதலில் முதலுதவி அளித்துவிட்டு, புளோரிடாவுக்கு ஆம்புலன்ஸ் விமானத்தில் எடுத்துச்சென்று அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் அந்த நாட்டை உலுக்கி உள்ளது.
இந்த கொலையில் சந்தேக குற்றவாளிகள் என கருதப்படுகிற 4 பேரை அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக்கொன்றனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அதிபர் ஜோவனல் மோயிஸ் படுகொலை மற்றும் ஹைட்டியின் முதல் பெண்மணி மார்டின் மோயிஸ் மீதான தாக்குதல் குறித்து வருத்தம் அடைந்தேன். அதிபர் ஜோவனல் மோயிஸ்சாரின் குடும்பத்தாருக்கும் அந்நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இந்தியாவில் புதிதாக 11,903 பேர்
கர்நாடக மாநில புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பா ஆகாஷ் எஸ் ஏவுகணை மற்றும் துருவ் மார்க் - 3 என்ற அதிநவீன இ