கமலின் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்... ரசிகர்கள் உற்சாகம்!
Jul10
கமலின் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்... ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இப்படத்திற்கான போட்டோ ஷூட் இன்று நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை வெளியிட இருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருக்கிறார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.