நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நடாலி சீவர் 55 ரன்களும், ஆலன் ஜோன்ஸ் 43 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் ஷிகா பாண்டே 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே ஷபாலி வர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.ஸ்மிருதி மந்தனா 17 பந்தில் 6 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஒரு ரன்னில் வெளியேறினார்.
இந்தியா 8.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. அதன்பின் மழை நிற்கவில்லை. ஹர்லின் டியோல் 17 ரன்னும், தீப்தி ஷர்மா 4 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன், தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகி விருது நடாலி சீவருக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர
பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்ட
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் ப
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ்
வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இ
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் வ
ஈரானிய கால்பந்தாட்ட அணியினர் கனடாவிற்கு சுற்றுப் பயண
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷே
உலகக் கிண்ண வ-20 போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இந்
அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைப
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும்
உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சி
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெ
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட்
