ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே முடியாது என்பதை எதிரணியினரிடம் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.
என்று நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
பிரயோசனமற்ற இந்த ஆர்ப்பாட்டங்களைக் கைவிட்டுவிட்டு நாட்டினதும் மக்களினதும் நலன் சார்ந்த அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் எதிரணியினரிடம் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நான் நாடாளுமன்ற உறுப்பினராக – அமைச்சராகப் பதவியேற்றவுடன் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை எதிரணியினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிப்பிட்ட ஒரு சிலரைக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே முடியாது.
நாட்டு மக்கள் மனதில் ‘தாமரை மொட்டு’ சின்னமே இருக்கின்றது. இந்த ‘மொட்டு’க்கு வாக்களித்துத்தான் நாட்டின் பலமிக்க ஜனாதிபதியையும், மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடனான அரசையும் மக்கள் தெரிவு செய்தார்கள்.
எதிரணியினரின் இந்த ஆர்ப்பாட்டங்கள், நாட்டு மக்கள் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் வழங்கிய அமோக ஆணைக்குத் தூசு.
எனவே, பிரயோசனமற்ற இந்த ஆர்ப்பாட்டங்களைக் கைவிட்டுவிட்டு நாட்டினதும் மக்களினதும் நலன் சார்ந்த அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிரணியினரிடம் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.
நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டே
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி மாகாணசபைகள் என்
திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய
நுவரெலியாவில் இளம் யுவதியின் விபரீத முடிவு காரணமாக பெ
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்
பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமை
ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமத
நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கான தீர்வாக அரச
நானுஓயா கிளாசோ கல்கந்தை மேல் பிரிவு தோட்ட அம்மன் ஆலயத
இலங்கையில் அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும
கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு
அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண
