அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கைப் பிரேரணை தொடர்பாக உடனடியாக தீர்மானம் எடுக்கப்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை இந்த மாதம் 19 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 20 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு செயற்படும் என்பது தொடர்பாக பிரபல ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பிய போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தில் அவசர தீர்மானம் ஒன்றை எடுக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த அவநம்பிக்கைப் பிரேரணை மீதான விவாதத்தைக் கருத்திற்கொண்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும் தினத்திலேயே இதுகுறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் சுமந்திரன் கூறினார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (06) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் ரயில
மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு க
அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபத
கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்
இலங்கையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த யானை ஒன்று தனது 69
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தீ காயங்களுடன் உயிரிழந்த
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத
யாழ். நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர
கொரோனா தொற்று பரவலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தனி
இலங்கையிலுள்ள அதிகளவான குடும்பங்கள் தமது உணவிலிருந்
நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று தேவால
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (28-05-2022) என்னவென்று தெரிந்
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங
எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்ப
