More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள கம்மன்பில தயாராக வேண்டும் – மரிக்கார்
நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள கம்மன்பில தயாராக வேண்டும் – மரிக்கார்
Jul 14
நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள கம்மன்பில தயாராக வேண்டும் – மரிக்கார்

அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.



கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது:-



“விலை சூத்திரம் அமுலில் இருந்திருக்குமாயின் எரிபொருள் விலை மேலும் அதிகரித்திருக்கும் என்று அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார். அவர் இதனை சாரம் அணிந்துக்கொண்டுதான் கூறினாரா எனக் கேட்கின்றேன்.



கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உலகச் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 19 டொலராகக் குறைந்தபோது, எரிபொருள் விலை குறைந்திருக்க வேண்டும். 50 ரூபாவுக்குக் குறைந்திருக்க வேண்டும். எரிபொருள் விலையைக் குறைத்தார்களா?



அதேபோன்று கடந்த வருடம் ஒரு பீப்பாய் எண்ணெயின் சாதாரண விலை டொலர் 45.5 ஆகக் காணப்பட்டது. இதன்போதேனும் எரிபொருள் விலையைக் குறைத்தார்களா? எரிபொருள் விலையைக் குறைக்காது டொலர் 64ஆக உயர்வடைந்தபோது எரிபொருள் விலையை அதிகரித்துள்ளனர்.



வருட இறுதியில் உலக சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை டொலர் 100ஆக அதிகரிக்கப்போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஏனெனில் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையுடன் உலக நாடுகள் திறக்கப்படும்போது, விமான நிலையங்கள் திறக்கப்படும்போது, உலக மக்களின் வாழ்வாதார நிலைமை சாதாரண நிலையை அடையும்போது, நுகர்வு அதிகரிக்கும்போது எரிபொருள் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.



விலை சூத்திரம் அமுலில் இருந்திருக்குமாயின் குறைந்த விலைக்கு எரிபொருள்களை விநியோகித்திருக்கலாம். எனவே, எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் கதைக்காது நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வதற்கு உதய கம்மன்பில தயாராக வேண்டும் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar10

நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு கா

Jan26

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவ

Apr10

மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிகà

Jun14

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலà

Mar09

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்

Mar28

நாட்டு மக்கள் உணவுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் நாடà

Mar15

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக ஊடக ஆர்வல

Feb01

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை நà

Feb04

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி ஆயுதப் படைகளிà

Apr05

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றி

Apr04

நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பிரித்தானிய பெà

Aug21

மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டà¯

Feb06

நிட்டம்புவை - பஸ்யாலை பிரதேசத்தில் இன்று வீடொன்றுக்கு

Apr03

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி தà®

Mar26

இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுà®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (09:49 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (09:49 am )
Testing centres