ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மழையால் நேற்றிரவு அஹர் நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 6 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் பல வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணியின்போது 2 தீயணைப்பு படை வீரர்கள் பலியாகி உள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 30 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு சில இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து, அதிலிருந்து வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். வீட்டின் கூரைகளில் தஞ்சம் அடைந்துள்ள அவர்களை மீட்கும் பணி வேகமாக நடைபெறுகிறது. தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாருடன், ராணுவமும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.
வெள்ளப்பெருக்கால் ரெயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து மற்றும் ரைன் நதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்த உலகின் அதிவேக ஏவுகணை
உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை நிறுத்தக்கோரி ஐ.நா பாதுக
தமது நாட்டில் உற்பத்தியை நிறுத்தியுள்ள வெளிநாட்டு நி
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் ம
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் த
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் திடீரென தனது த
உலகின் உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக போர்க்கப்
சீனாவில் பிறந்தவர் பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் க
உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் ரஷிய ராணுவம் நடத்
கினியா நாட்டின் பேட்டா என்ற பகுதியில் ராணுவ தளம் அமைந
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன
