More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பெருந்தலைவர் காமராஜருக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!
பெருந்தலைவர் காமராஜருக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!
Jul 15
பெருந்தலைவர் காமராஜருக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.



காமராஜரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சென்னை அண்ணாசாலை பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜரின் திருஉருவ சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழே அவரது உருவப்படமும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.



இன்று காலை அரசின் சார்பில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதும் காமராஜரின் உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



அவருடன் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன், அமைச்சர்கள் பொன்முடி, வெள்ளக்கோவில் சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், தா.மோ.அன்பரசன், சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, தமிழச்சி தங்கபாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன் மற்றும் உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினார்கள்.



காமராஜரின் சொந்த ஊரான விருதுநகரில் உள்ள அவரது நினைவு இல்லம், மணிமண்டபம் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.



நூற்றாண்டு மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு இன்று காலை கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



தொடர்ந்து நாடார் மகாஜன சங்கம் சார்பில் சத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வித் திருவிழா கொண்டாடப்பட்டது. தொழில் அதிபர் ஏ.பி. செல்வராஜன் தலைமை தாங்கினார். கனிமொழி எம்.பி. விழாவில் பங்கேற்று காமராஜர் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்களை அவர் வழங்கினார்.



விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர். சீனிவாசன், தங்கப்பாண்டியன், சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு கலெக்டர் மேகநாதரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



தொடர்ந்து நாடார் மகாஜன சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமையில் காமராஜர் நினைவு இல்லத்தில் பெண்கள் நோட்டு புத்தகங்களை வைத்து மரியாதை செய்தனர்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb18

இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்றà

Mar08

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ் à

May30

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வà

Jun26

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்à®

Mar07

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கà

May15

இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங்

Feb02

விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரை

Dec31

ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச்

Jan18

டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிராà®

Jun14

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான திரவ மருத்துà

Sep17

பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கà¯

Feb20

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலைà

Jan17

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று சொல்கிற வகை

Jun09

  இந்தியாவின் உத்தர்ப்பிரதேசம் லக்னோவைச் சேர்ந்த 16 வà

Jan17

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (03:11 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (03:11 am )
Testing centres