இந்தியில் சமந்தா, பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நடித்து ஓ.டி.டி தளத்தில் வெளியான ‘தி பேமிலிமேன் 2’ வெப்தொடர் சர்ச்சையை கிளப்பியது. அதில் சமந்தா ஏற்று நடித்த போராளி கதாபாத்திரத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் தொடரை தடை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.
விரைவில் இந்த தொடரின் மூன்றாம் பாகம் தயாராக உள்ளது. இதில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவின. சர்ச்சை தொடரில் நடிக்க விஜய் சேதுபதி எப்படி சம்மதித்தார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு நடிகர் விஜய்சேதுபதி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, “நான் ஷாகித் கபூருடன் இணைந்து புதிய வெப் தொடரில் நடிக்கிறேன். மனோஜ் பாஜ்பாயுடன் சேர்ந்து எந்த தொடரிலும் நடிக்கவில்லை. ஆனாலும் அவருடன் நடிக்க ஆர்வம் உள்ளது’’ என்றார். இதன்மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய் சேதுபதி.
அவர் நடித்துள்ள லாபம், கடைசி விவசாயி போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரி
தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-க
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரிய
ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகர் ரஜினிக
கடந்த திங்கட்கிழமை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்ட
வலிமை வெற்றியை தொடர்ந்து AK 61
நடிகர் அஜித் தமிழ் சினி
இப்படத்தை தொடர்ந்து அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும
நடிகை சமந்தா ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் ஒரு பிரபலம். அ
நடிகர் அருள்நிதியின் படத்தின் டைட்டில் போஸ்டரை விஜய்
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி
சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக
இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷ
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறு
நடிகர் ரஜினிகாந்துக்கு ஜப்பான் நாட்டில் ஏராளமான ரசிக
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த
