கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. இதனால் சில தனியார் பள்ளிக்கூடங்கள் இணையவழியில் மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்கின்றன. தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
எனினும் போதிய வசதி இல்லாத குழந்தைகள், தொலைக்காட்சி மூலம் கல்வி பயில இயலாத நிலை உள்ளது. மேலும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் நேரடியாக பயின்றால்தான் பாடங்களை நன்கு கற்பதற்கு முடிகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியை இசபெல்லா செல்லகுமாரி, அறிவியல் ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் தங்களது பள்ளிக்கூடத்தில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவிடும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பாடங்களை பயிற்றுவிக்கின்றனர்.
அதன்படி நேற்று மூலைக்கரைப்பட்டி மறவன்குளத்துக்கு சென்ற ஆசிரியர்கள், அங்குள்ள மரத்தடியில் மாணவர்களை முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அமரச்செய்து பாடங்களை பயிற்றுவித்தனர். கல்வி தொலைக்காட்சியில் வகுப்பு வாரியாக பாடங்கள் ஒளிபரப்பு செய்வதை மாணவர்கள் தவறாது பார்த்து பயில வேண்டும் என்றும் விளக்கி கூறினர். மாணவர்கள் கல்வி பயில விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியர்களை தலைமை ஆசிரியை அகஸ்டினா பாராட்டினார்.
திருப்பதி பாராளுமன்ற தொகுதியில் வரும் 17-ம் தேதி இடைத்த
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத
கேரளாவில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் யானை பாகன் மீ
நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் அதிமுக வெ
நாட்டின் பிற பகுதிகளை போலவே டெல்லியிலும் கொரோனா தொற்ற
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்ப
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற ப
ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை வாங்கும்
தொழிலதிபரை மணந்த சில நாட்களில் கன்னட நடிகை ஒருவர் பின
பழங்குடியின சமூகங்களின் நலனே அரசின் முதன்மையான முன்ன
பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள எய
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
தமிழகத்தை உலுக்கிய புதுக்கோட்டை சிறுமி துஷ்பிரயோகம்