இந்தியர்களுக்கு எதிராக இனரீதியாக பதட்டமாக சூழல் நிலவுகிறதா என்பதை விசாரித்து அறிக்கை அனுப்புமாறு டர்பன் நகரத்திற்கு அந்நாட்டு மூத்த அமைச்சர்களை அனுப்பி உள்ளார் என தென்னாப்பிரிக்க அதிபர் சிலிக் ராமபோஸா. தென் ஆப்பிரிக்காவின் அதிபராக கடந்த 2009 முதல் 2018-ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்த ஜேக்கப் ஜூமா, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக , விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அரசியல் சாசன நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டிருந்தது. அவா் நேரில் ஆஜராகாததால் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக அவருக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 7-ஆம் தேதி தென்னாப்பிரிக்கா முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா போலீஸாரிடம் சரணடைந்தாா். அவா் தற்போது க்வாஸுலு-நடால் மாகாணத்திலுள்ள எஸ்ட்கோா்ட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து தென் ஆப்பிரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடந்த வருகிறது
இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக, க்வாஸுலு நடால் மாகாணத்தில் டா்பன் நகரிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த போராட்ட சூழலை பயன்படுத்தி இந்தியா்கள் அதிகம் வசிக்கும் ஃபீனிக்ஸ் புறநகா் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்தியர்களுக்கு எதிராக சூறையாடல்களும் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன.
இந்திய வம்சாவளியினருக்கும் கருப்பினத்தவா்களுக்கும் இடையே வன்முறையாக வெடித்தது. இதற்கு பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடுகிறார்கள். டர்பன் நகரில் இரு சமூகத்தினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் நலேடி பாண்டருடன் பேசும் போது, தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான பரவலான வன்முறை மற்றும் கலவரம் குறித்து இந்தியா சார்பில் கவலை தெரிவித்தார்.
இதையடுத்து பதற்றத்தைத் தணிப்பதற்காக காவல்துறை அமைச்சரும், க்வாஸுலு நடால் மாகாண முதல்வருமான பேகி சிலியை டா்பன் நகருக்கு அதிபா் சிறில் ராமபோஸா வெள்ளிக்கிழமை அனுப்பிவைத்தார் முன்னதாக, டா்பன் நகரிலுள்ள எதேக்வினி பகுதி நிலவரத்தை அவா் நேரில் பாா்வையிட்டாா். எனினும், பதற்றம் நிறைந்த ஃபீனிக்ஸ், பீட்டா்மரிட்ஸ்பா்க் ஆகிய புறநகா் பகுதிகளுக்கு அவா் செல்லவில்லை. அந்தப் பகுதிகளுக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்யுமாறு அமைச்சா் பேகி சிலிக்கு ராமபோஸா உத்தவிட்டிருக்கிறார்.
இதனிடையே முன்னாள் அதிபரின் ஆதரவாளா்கள் பல்வேறு மாகாணங்களில் நடத்திய வன்முறைப் போராட்டங்களில் கடைகள் சூறையாடப்பட்டன. இந்தச் சம்பவங்களில் 110-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகி உள்ளனர்.